வேளச்சேரி குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் வெள்ள மீட்பு ஒத்திகை

வேளச்சேரி குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் வெள்ள மீட்பு ஒத்திகை
X

வேளச்சேரி குளத்தில் நடைபெற்ற வெள்ள மீட்பு ஒத்திகை.

வேளச்சேரி குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது தொடர்பாக, தீயணைப்பு துறை சார்பில், வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோவில் குளத்தில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் வெள்ள மீட்பு ஒத்திகையை நடத்தினர்.

வெள்ள பாதிப்பின் போது, பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என, செயல்முறை விளக்கம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக, வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்து, செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் பங்கேற்று, வெள்ள மீட்பு ஒத்திகையை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!