சென்னை பனையூரில் நடிகர் விஜய்க்கு சிலை அமைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை பனையூரில் நடிகர் விஜய்க்கு சிலை அமைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்
X
சென்னை பனையூரில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அமைத்த சிலை.
சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்றம் சார்பாக சிலை அமைத்து, ரசிகர்களே அதனைத் திறந்து கொண்டாடினர்.

*சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் திறக்கப்பட்ட விஜய்யின் திருவுருவ சிலைக்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து கொண்டாட்டம்*

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடிகர் விஜய்யின் மக்கள் மன்ற தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தன.

இச்செய்தியானது வாட்ஸ் ஆப்பில் பரவிதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பனையூரில் உள்ள மக்கள் மன்ற தலைமை அலுவலகத்திற்க்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனை தொடர்ந்து கூட்டம் அதிகமானதால் நடிகர் விஜய் அலுவலகத்திற்க்கு வருவது ரத்தானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகை தந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை கொண்டு விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விஜய்யின் திருவுருவ சிலையானது திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சிலைக்கு ரசிகர்கள் மாலை அணித்து கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!