ரியல் எஸ்டேட் துறை : விருது வழங்கும் விழா

ரியல் எஸ்டேட் துறை :  விருது வழங்கும் விழா
X

கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் FICCI(ஃபிக்கி) அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பூபேஷ் நாகராஜன் பேட்டி அளித்தார்.

சென்னை கிண்டியில் ரியல் எஸ்டேட் துறைக்கென விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

FICCI(ஃபிக்கி) என்ற அமைப்பின் தமிழ்நாட்டின் சார்பில் கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கென கருத்தரங்க கூட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளரிடம் பேசிய கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் FICCI(ஃபிக்கி) அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பூபேஷ் நாகராஜன்*:

மகாத்மா காந்தி மூலம் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட FICCI(ஃபிக்கி) என்ற அமைப்பின் தமிழ்நாட்டின் சார்பில் கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கென வருட வருடம் விருது வழங்கும் விழா மற்றும் கருத்தரங்க கூட்டம் நடைபெறும் எனவும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த நிகழ்வு எப்பொழுது இந்த வருடம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கட்டுமானத்துறையின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கட்டுமானத்துறை வல்லுநர்களுடன் விவாதிக்கப்பட்டு நிகழ்ச்சியின் முடிவில் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு 11 வகை தலைப்புகளில் விருதுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் 2019ஆம் ஆண்டில் இருந்து ஒரு கஷ்டமான சூழ்நிலையில் வருவதாகவும் அதன் பின்னர் கொரோனா காலகட்டத்தில் மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டது ஆனால் தற்போது மூன்று மாத காலத்தில் ஏற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் வரும் ஜனவரி முதல் இந்த ரியல் எஸ்டேட் தொழிலை பொருத்தவரையில் நல்ல எதிர்காலம் இருக்கும் எனவும்..

ஏனென்றால் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான உழைப்பாளர்கள் இருக்கக்கூடிய துறை கட்டுமானத்துறை என்றும்..

விவசாயமும் கட்டுமானத் துறையும் பாதிக்கப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார தேக்க நிலை உழைப்பாளர்கள் மத்தியில் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

கம்பிகளின் விலை உயர்வு என்பது உலகம் சாந்த விலை மற்ற பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசிடம் முறையிட்டிருப்பதாகும் இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பதாக தெரிவித்தார்..

அதே போல் இரவு சதுர அடிக்கு 300 ரூபாய் வரை அதிகரித்திருப்பதாகவும் இதன்மூலம் வீடு வாங்குபவர்களுக்கும் கட்டுமான துறையில் உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சார்பில் கட்டப்படுகின்ற வீடுகள் சரியான முறையில் கட்டப்படுவதில்லை முறைகேடு நடந்திருப்பது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர் அரசாங்கமும் நிபுணர் குழு அமைத்து விசாரித்து வருகிறது தவறு செய்திருந்தால் நிச்சயம் அதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story