தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்: விமானம் மூலம் சென்னை வந்தார்

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜனிகாந்த் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

டெல்லியில் கடந்த 25ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்க்கு திரைத் துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று ரஜினிகாந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை வந்தடைந்த ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்தும் கோஷங்கள் எழுப்பியும் உற்சாகமாக வரவேற்றனர் இதையடுத்து காரில் வீட்டிற்க்கு புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!