கொரோனா பணிகள்: தமிழக ஆளுநருடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

கொரோனா பணிகள்: தமிழக ஆளுநருடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
X
கோப்பு படம்.
தமிழக ஆளுனர் பன்வாரிலார் புரோகித்தை இன்று தமிழக முதல்வர் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தமிகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி மருந்து வருகை குறைவாக உள்ளது. கூடுதலாக அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.

மேலும், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முதல்வர் சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!