வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் பங்கேற்பு

வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் பங்கேற்பு
X

வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.

சென்னை எழிலகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.

சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்டரங்கில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகவரித் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வணிக வரித்துறை ஆணையர் சித்திக், செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொணடனர். இது குறிதது அமைச்சர் மூர்த்தி கூறியதாவது.

இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவின் தகவலின்படி 261 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு 1.43 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்கள் பல செயல்படுவதையும் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கான ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இது போன்ற போலி நிறுவனங்கள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலியான நிறுவனங்கள் மீது காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்கள் சரியான வரி செலுத்தாததால் 39909 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தமாக 1.74 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மாநிலங்களின் எல்லையில் கண்காணிக்கும் பறக்கும் படையின் எண்ணிக்கை 50 லிருந்து 100 ஆக உயர்த்தப்பட உள்ளது.

24 மணி நேரமும் வெளிமாநிலங்களில் இருந்து உரிய ஆவணங்களின்றி வரும் வாகனங்களை கண்காணிக்கபடும் என்றும் அமைச்சர் கூறினார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!