இருசக்கர வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

இருசக்கர வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X
இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த கட்டிட தொழிலாளி மாதவன்.
இருசக்கர வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை.

இருசக்கர வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை

கும்பகோணம் மாவட்டம் திரும்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர்கள் மாதவன்(47), சுந்தரி (40)தம்பதி இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் பல்லாவரம் ரேடியல் சாலை அருகே தங்கி கட்டிட தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாதவன் மற்றும் அவருடன் வேலை செய்யும் லட்சுமணன் என்பவரும் கட்டிட வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். ரேடியல் சாலையை கடந்து செல்லும்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வாகன ஓட்டிகள் சிட்லபாக்கம் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் லேசான காயங்களுடன் இருந்த லட்சுமணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் உயிரிழந்த மாதவ்னின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த விபத்து ஏற்படுத்திய சிவகாசியை சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் என்பவரை கைது செய்து சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!