அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
X

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவான்மியூரில்  இன்று தொடங்கி வைத்து பேசினார். 

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை , முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்பட இருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு, செயல் பாபுவாக பணியாற்றுகிறார். பேரவையில் அறிவித்த திட்டங்களை, ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளார் அமைச்சர் சேகர் பாபு. அவர், எள் என்று சொல்வதற்கு முன்னால், எண்ணெயாக விரைந்து வேலை செய்வதாக, ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

Tags

Next Story
ai based healthcare startups in india