முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார், பீட்டர் அல்போன்ஸ்
சென்னையில் சிறுபான்மை இன ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி அளித்தார்.
கிறிஸ்தவ நல்லாட்சி இயக்கத்தின் சார்பில் இந்திய கிறித்தவ தின விழா தோமையார் மலையில் உள்ள மான் போர்ட் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்வில் குடிசைமாற்று வாரியதுறை அமைச்சர் தாமோ.அன்பரசன் ,
சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் பீட்டர் ஆல்போன்ஸ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அருட்தந்தையார்கள் கலந்துக்கண்டனர். நிகழ்சியின் நிறைவாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு :-
முதல்வர் பெரிய யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு புறம் நோய் தொற்று , மறுபுறம் நிதி நெருக்கடி , சீர்கெட்டு போன அரசு நிர்வாகம், இவற்றை சரி செய்ய பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார். இந்திய மக்களை வாழவைப்பதிலும், பாதுகாப்பதிலும் கிறிஸ்தவர்கள் பங்காற்ற வேண்டும்.
நிகழ்வில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேச்சு :- இந்த தொகுதியில் நான் அதிகம் வெற்றி பெறுவதற்கு காரணம் கிறுஸ்தவ மக்கள் தான். தகுந்த ஆட்களை தகுந்த பொறுப்புக்கு கொண்டுவந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக வை பொறுத்தவரையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் இயக்கமாக உள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் பேட்டி :-
நீட் தேர்வுக்கு சட்ட பூர்வமான ஆதராவை தருவோம் என சட்டமன்றத்தில் பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தது போல பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்க செல்லும் போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும் பெட்ரோல் விலையை 100 தொடுகிறது விரைவில் சமையல் கியாஸ் விலை ௧௦௦௦ மத்திய அரசு விலையை கூட்டி கொண்டே போவது தவறு. பா.ஜ. க வினர் இதற்கு சம்மந்தம் இல்லாதது போல இருக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu