சென்னை சவீதா கல்லூரி பட்டமளிப்பு விழா : துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

சென்னை சவீதா கல்லூரி பட்டமளிப்பு விழா :  துணைநிலை ஆளுநர் பங்கேற்பு
X

கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன். பைல் படம்

சென்னை சவீதா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

சென்னை, சவீதா மருத்துவம் மற்றும் தொழிலநுட்ப அறிவியல் நிறுவனத்தின் 17-வது பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் இன்று (18-11-2021) கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படங்களை பயின்ற 1085 மாணவர்கள் பட்டம் பெற்றனர். மேலும், பல்வேறு துறை வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கொளரவித்தார். நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர். ந.மா. வீரையன், துணைவேந்தர் டாக்டர். ராகேஷ் குமார் ஷர்மா மற்றும் பதிவாளர் டாக்டர். தே. தனசேகரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு வழாவில் துணைநிலை ஆளுநர் ஆற்றிய உரை.

• கடுமையான மழை மற்றும் புயல் எச்சரிக்கைக்கு இடையிலும் மாணவர்கள் இங்கே பட்டம் பெற வந்திருப்பதை பாராட்டுகிறேன். இன்று அவர்களுடைய வாழ்க்கையில் பெருமையையும் திருப்புமுனையை ஏற்படுத்துகின்ற நாள். ஒரு மருத்துவராக நான் மருத்துவ மாணவர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் மனிதத் தன்மையோடு செயல்படுங்கள். நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

• மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்களாக உயர வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்ட.ர் அப்துல் கலாம் கூறியது போல பெரிதாக கனவு காணுங்கள். பெரிதினும் பெரிது கேள் என்று சொன்னார் சுப்பிரமணிய பாரதி.

• நாம் பெரிதாக கனவு காணுவதற்கும் பெரிய சாதனைகளை் படைப்பதற்கும் அடிப்படையாக சில குணங்கள் இருக்க வேண்டும். சிறிய சிறிய விஷயங்களில் கவனமாக செயல்பட்டால் பெரியவற்றை நாம் சாதிக்க முடியும். யாராவது நமக்கு உதவுவார்கள் என்று இல்லாமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்களாக செயல்படவேண்டும். இதுவே, மாணவர்களுக்கு என்னுடைய கருத்து.

• பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிக எண்ணிக்கையிலான பட்டமேற்படிப்பு வனங்களையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஏற்படுத்தி வருகிறார். இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். ஆராய்ச்சிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தொடக்கத்தில் கொரோனா சூழலை நாம் சமாளிக்க முடியாது என்று நினைத்தோம். ஆனால் நம்முடைய ஆராய்ச்சிகளின் பயனாக காரணமாக அதனை வெற்றிகரமாக எதிர் கொண்டோம்.

• இந்தியாவால் தடுப்பூசி தயாரிக்க முடியுமா என்று உலக நாடுகள் சந்தேகமாக பார்த்தபோது இந்தியா தடுப்பூசிகளை கண்டுபிடித்தது. இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்திருக்கிறது. உலகில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவின் தடுப்பூசியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்களாக நாம் பெருமைப்பட வேண்டும். இப்போது வளர்ந்த நாடுகளும் நம்முடைய தடுப்பூசியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

• கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் எண்ணற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை அளித்த சவீதா மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன். கொரோனா தடுப்பூசி தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் இப்போது குழந்தைகளுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகமே அதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

• சுவாமி விவேகானந்தா ஒருமுறை கூறினார். உலகிலுள்ள பிரச்சனைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள எனக்கு தைரியம் உண்டு. நான் மலைகளை பொடிப்பொடியாக ஆக்குவேன். சமுத்திரத்தை ஒரு சொட்டு தண்ணீராக குடித்து விடுவேன் என்று. அதுபோன்ற திடமான மன உறுதியை மாணவர்கள் பெற வேண்டும். தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்.

• அதிகாலையில் ஏழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யோகா பழகுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நோக்கத்தில் தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பண்பாட்டை உலகம் அறியச் செய்யும் வகையில் ஜூன் 21 நாளை சர்வதேச யோகா தினமாக கொண்டாடச் செய்தார்.

• அப்துல் கலாம் கூறியது போல கனவு காணுங்கள். தூங்கும் போது வருவது கனவல்ல. நம்மை தூங்க விடாமல் இருப்பது தான் கனவு. நமக்குள் எழுச்சியை விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கனவு. பெரிய பெரிய சாதனைகளை செய்வதற்காக நாம் கனவு காண வேண்டும். அதற்கான நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் சவால்கள் இருந்தாலும் நம்முடைய கிளைகள் வெட்டப்பட்டாலும் வேர்கள் ஆழமாக இருந்தால் நம் உயர முடியும். அப்படிப்பட்ட சவாலான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். மாணவர்கள் ஆராய்ச்சி நோக்கத்தோடு படிக்க வேண்டும்.

• சமூக வலைதளங்களில் மூழ்கிப் போகாதீர்கள். தொழில்நுட்பம் நமக்கு உதவ வேண்டும். நம்மை திசை திருப்பக் கூடாது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒன்றை வற்புறுத்தினால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், அவர்கள் உங்கள் நன்மைக்காக சொல்லுவார்கள். பெற்றோர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் அவருடைய கனவும் உங்களுடைய கனவும் நிறைவேறும்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil