சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தந்தை ஆஜர்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிய தந்தை அப்துல் லத்தீப்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: விசாரணைக்காக தந்தை அப்துல் லத்தீப் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அதே ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சில பேராசிரியர்கள் மீது புகார்களை எழுந்ததை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. இதனால், பாத்திமா லத்தீப் மரண வழக்கில் சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரின் தந்தை அப்துல் லத்தீப் மத்திய ,மாநில அரசிடம் கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் 15-ம்தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் 174 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் வழக்கை உடனடியாக விரைந்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அப்துல் லத்தீப்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதற்காக நேற்று கொச்சியில் இருந்து விமானம் மூலம் அப்துல் லத்தீப் சென்னை வந்தார். இன்று காலை சென்னை, பெசன்ட் நகர், ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி தன் தரப்பு வாதத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாலர்களிடம் அப்துல் லத்தீப் பேசியதாவது: இன்று காலை 10:30 மணிக்கு சிபிஐ போலீசார் என்னை விசாரணைக்காக அழைத்தனர் அவர்கள் எங்களிடம் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்தோம்.சுமார் 2.30 மணிநேரம் எங்களிடமிருந்து தகவல்களை கேட்டு பதிவு செய்து கொண்டனர்.இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் கொடுக்கப்படும் அறிக்கைக்கு பின்னரே எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்று தெரியவரும்.
எங்களது மகள் இறந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை ஆகையால் இதன் தொடர்ச்சியாக நாளை தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து தமிழக அரசின் சார்பாக அழுத்தம் கொடுக்க முயற்சி செய்வோம். மேலும் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை நேர்மையாகவும் நியாயம் கிடைக்கும் விதமாகவும் இருக்கும் என நம்புகிறோம். எனது மகளின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய குற்றவாளிகளை விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu