மும்பையில் இருந்து 2 லட்சம் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை வருகை!

மும்பையில் இருந்து  2 லட்சம் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை வருகை!
X

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய கோவிசீல்டு தடுப்பு மருந்தை பணியாளர்கள் இறக்கிய காட்சி.

தமிழகத்திற்கான 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுதிரனாளிகளுக்கு அவா்கள் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

இவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்காக வந்திருந்தன. 18 பாா்சல்களில் 588 கிலோ தடுப்பூசி மருந்து பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமானநிலைய அதிகாரிகள் அந்த தடுப்பூசி மருந்து பாா்சல்களை தனியாா் மருத்துவமனை எஜென்சிகளிடம் ஒப்படைத்தனா்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!