சென்னை விமானநிலையம் : மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு

சென்னை விமானநிலையம் : மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு
X
பைல் படம்
சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழந்தார்.

சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வந்த கேன்சா் நோயாளி பயணி, சென்னை விமானநிலையத்திற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் சவ்விக் பெயின் (37). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் இவா் கேன்சா் நோயாளால் பாதிக்கப்பட்டாா்.இதையடுத்து சவ்விக் பெயினை சிகிச்சைக்காக தமிழ்நாட்டில் உள்ள வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு 3 மாதங்களுக்கு முன்பு வந்தாா். மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

இதையடுத்து சவுவிக் பெயினை அவருடைய தந்தை ஸ்வராஜ் குமாா் பெயின் அழைத்து கொண்டு சென்னை விமானநிலையம் வந்தாா். சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் நேற்று இரவு பயணம் செய்வதற்காக சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து அமா்ந்திருந்தனா்.

அப்போது திடீரென சவுவிக் பெயின் மயங்கி விழுந்தாா்.இதையடுத்து உடனடியாக அவரை சென்னை விமானநிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு,அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் விரைந்து வந்து,சவுவிக் பெயின் உடலை கைப்பற்றி,பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அதோடு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!