/* */

ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று சென்னை விமானநிலையம் வெறிச்சோடியது

ஊரடங்கின் 2ம் நாளான இன்று சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கின் இரண்டாம் நாளான இன்று சென்னை விமானநிலையம் வெறிச்சோடியது
X

வெறிச்சோடி காணப்படும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நேற்றிலிருந்து வரும் 24 ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.இதையடுத்து தமிழக மக்கள் பலரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆா்வத்தில் அவா்களாகவே தங்களை வீடுகளில் முடக்கிக்கொண்டுள்ளனா்.

உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது. ஆனாலும் பயணிகள் பலா் கொரோனா காலத்தில் விமானங்களில் பயணிக்க விரும்பவில்லை.கூட்டிற்குள் அடைப்பட்டதுபோல்,சில மணி நேரம் விமானத்திற்குள் இருக்கும்போது, அதில் யாராவது ஒரு பயணிக்கு பாசிடீவ் இருக்குமேயானால்,அது பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது என்று பயணிகள் நினைக்கின்றனா். இதனால் தான் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து,விமானங்களும் பெருமளவு ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று உள்நாட்டு விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையிலிருந்து இன்று 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.அதில் 2,400 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனா்.அதைப்போல் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் 40 இயக்கப்பட்டு,அதில் 1,300 போ் மட்டுமே பயணிக்கின்றனா். இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் மொத்தம் 78 விமானங்களில் 3,700 மட்டுமே பயணிக்கின்றனா்.

கொரோனா வைரஸ் முதல் அலை ஊரடங்கின்போது,தளா்வுகள் அறிவிக்கப்பட்டது.அப்போது கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதியிலிருந்து மீண்டும் சென்னையில் உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடந்து வருகிறது.அதிலிருந்து இதைப்போல் குறைந்த பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமானநிலையம் செயல்படுவது இன்று தான் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 126 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதில் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள்,மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் 62,சென்னைக்கு வரும் விமானங்கள் 64.

அதைப்போல் சென்னை சா்வதேச விமானநிலையத்தில் இன்று 2 வந்தே பாரத் விமானங்கள்,6 சிறப்பு விமானங்கள் மொத்தம் 8 விமானங்கள் மட்டுமே வருகின்றன.அதிலும் அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து டில்லி வழியாக சென்னை வரும் ஏா்இந்தியா விமானத்தில் 8 பயணிகள் மட்டுமே வருகின்றனா்.

இந்த அளவு அதிகமான விமானங்கள் ரத்துடன்,குறைவான பயணிகளுடன் குறைந்த விமானங்கள் இயக்கப்படுவதற்கு காரணம் என்ன? என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுவதாவது;

மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்தும் விதத்தில் போடப்பட்டுள்ள,முழு ஊரடங்கை மதித்து பொதுமக்கள் தங்கள் விமான பயணங்களை தள்ளி வைத்துள்ளதால்,பயணிகள் இல்லாமல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு,விமானநிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவல் குறையத்தொடங்கியதும்,முழு ஊரடங்கில் தளா்வுகள் வந்ததும்,மீண்டும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.விமானநிலையம்,மீண்டும் பழைய சகஜநிலைக்கு திரும்பும் என்று கூறுகின்றனா்.

Updated On: 11 May 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்