சென்னை அடையார் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சென்னை அடையார்  ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
X

அடையார் பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர். 

சென்னை அடையார் ஆற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சென்னை அடையார் திரு.வி.க. பாலத்தின் கீழ், அடையார் ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அடையாறு போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறை அதிகாரி இன்பராஜ் தலைமையில், ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
அடையார் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!