இளம் வயதில் அடுத்தடுத்து உலக சாதனை படைக்கும் பைபிள் சகோதரர்கள்

இளம் வயதில் அடுத்தடுத்து உலக சாதனை படைக்கும் பைபிள் சகோதரர்கள்
X

சென்னையில் சாதனை சிறுவர்களுக்கு டாக்டர் பட்டம்

இளம் வயதில் அடுத்தடுத்து உலக சாதனைகளை பைபிள் சகோதரர்கள் படைத்தனர்.

டாக்டர் அபிஷேக் இமானுவேல் ஜோசப் வயது 10 மற்றும் டாக்டர் கேவின் எபினேசர் ஜோசப் வயது எட்டு வயதுஇளம் வயதிலேயே டாக்டர் பட்டங்கள் பெற்ற இச்சகோதரர்கள்

இருவரும் இணைந்து ஒரே நேரத்தில் பைபிளில் உள்ள சங்கீதப் புத்தகம் முழுவதையும் அதாவது அதிகாரம் 1 முதல் 150 வரை 2461 வசனங்களை ஆங்கிலத்தில் இரண்டு மணி நேரம் 16 நிமிடங்கள் 33 வினாடிகளில் சரளமாக ஒப்பித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இச்சிறுவர்கள் இருவரும் சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தில் (மதுரை )உலக சாதனை சிறப்பு பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கேவின் எபினேசர் ஜோசப், அபிஷேக் இமானுவேல் ஜோசப், யூனிவர்ஷல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக்‌ ஆஃப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இச்சிறுவர்கள் செய்த ரெக்கார்ட்ஸ் ஆகும்.

இந்த சாதனை விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை புனித தோமையார் மலை மான்ப்போர்ட் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் பாதிரியார் ஐசக் டானியல் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags

Next Story
5ஜி யூசர்க்கான 50 நாட்கள் வேலிடிட்டி பேக் அறிமுகபடுத்தியது ஜியோ நிறுவனம்!