அர்ஜுனா விருது பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வரை சந்தித்தார்

அர்ஜுனா விருது பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வரை சந்தித்தார்
X

அர்ஜூனா விருது பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

அர்ஜுனா விருது பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அர்ஜுனா விருது பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர்..,தமிழகத்திலிருந்து இந்த விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.. தமிழக அரசு அளித்த ஊக்கத்தால் இளம் வயதில் அர்ஜுனா விருது பெற முடிந்தது.

முதல்வரிடம் வாழ்த்து பெற்றது பெருமையாக உள்ளது என்றார்.. *தொடர்ந்து பேசிய பவானி தேவியின் தாய் ரமணி .,*அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்தோடு பவானி தேவி இந்தியா வருவார் என நம்புகிறேன் என்றார் ஊக்கமளித்து வரும் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story