காரப்பாக்கத்தில் அப்பல்லோ மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை திறப்பு..

காரப்பாக்கத்தில் அப்பல்லோ மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை திறப்பு..
X

அப்பல்லோ மருத்துவமனையை நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் திறந்து வைத்தார்.

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் அப்பல்லோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் திறந்து வைத்தார்.

புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவமனை தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தங்களது கிளைகளை திறந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் அப்போலோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அப்போலோ கருத்தரித்தல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி தலைமை வகித்தார். நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், பூர்ணிமா பாக்கியராஜின் மருமகளுமான கீர்த்தி சாந்தனு, நடன இயக்குநர் ஜெயந்தி விஜய் ஆகியோர் விழாவில் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காரப்பாக்கத்தில் உள்ள அப்போலோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அப்போலோ கருத்தரித்தல் மையம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். மருத்துவமனை ஆகும். இங்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு, கருத்தரித்தல், இயற்கை பிரசவம் மற்றும் வலி இல்லாத பிரசவம், பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சேவைகளுடன் 24 மணி நேரமும் இயங்கும்.

அப்பல்லோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மருத்துவ சேவைகளை வழங்கும். சுமார் நாற்பது ஆண்டு கால மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் அப்பல்லோ குழுமத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட குழந்தைகள், மகளிர் மற்றும் தாய்மார்களுக்கென தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் நன்கு திட்டமிடப்பட்ட வடிவமைப்பு, குடும்பத்தினரை மையமாகக் கொண்டு இளம் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முழு அர்ப்பணிப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ குழு மூலம் 24 மணி நேரம் பச்சிளம் குழந்தை, குழந்தைகள் நலம், பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ பராமரிப்பு என மூன்று சேவைகளை வழங்கும்.

இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்காக 39 படுக்கைகள் கொண்ட பிரிவு உள்ளது. 12 படுக்கைகள் கொண்ட மூன்றாம் நிலை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மூன்று உள்ளது. ஒருங்கிணைந்த பிரத்யேக கரு மருத்துவம் மற்றும் சிக்கலான சிகிச்சைக்கு தீர்வளிக்கும் மகப்பேறு பிரிவு உள்ளது. 4 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது.

மேலும், காரப்பாக்கத்தில் புதியதாக தொடங்கப்பட்ட அப்பல்லோ கருத்தரித்தல் மையம் சென்னை அண்ணா நகர் மையத்தைத் தொடர்ந்து இரண்டாவதாகத் தொடங்கப்பட்டு உள்ளது. இது அப்பல்லோ குழுமத்தின் 18 ஆவது கிளை ஆகும். இந்த மையம் அதிநவீன உள்கட்டமைப்புடன் ஐ.வி.எஃப். (IVF) ஆய்வகம், கருத்தரித்தலுக்கு முன் மற்றும் பிந்தைய சிகிச்சை, பராமரிப்பு, வழிகாட்டுதல், சிகிச்சைக்கு முன், பின் உள்ள நெறிமுறைகளை கொண்டது ஆகும். மேலும், கருத்தரித்தல் தொடர்பான அனைத்து வசதிகள், மேம்படுத்திய லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் தொடங்கப்பட்டு உள்ளது.

மருத்துவமனை தொடக்க விழாவில் அப்போலோ ஹெல்த் அன்ட் லைப் ஸ்டைல் லிமிடெட் தலைமைச் செயல் அலுவலர் சந்திரசேகர் பேசியதாவது:

அப்போலோ மருத்துவமனையின் விரிவாக்கத்தின் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவை தவிர, கருத்தரித்தல் சேவையில் மருத்துவத் துறைக்கும், நாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவோம். அதி நவீன தொழில்நுட்பம், உலகத் தரத்திலான கருத்தரித்தல் சிகிச்சை செய்வதற்காகத் தொடங்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!