உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கோப்பு படம்
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவிவருவதால்,இந்திய விமானநிலைய ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.இதுவரை சா்வதேச விமானநிலையங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துவந்தது.
இப்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமானநிலைய ஆணையம் அறிவித்துள்ளது.உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை,இ- பதிவு கட்டாயம்.கேரளா மாநில பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.அதைப்போல் கோவை விமானநிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை இந்திய விமானநிலைய ஆணையம் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை,கோவை உள்ளிட்ட விமானநிலையங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் விபரம்:
கேரளா மாநிலத்திலிருந்து,தமிழகம் வரும் பயணியர் அனைவரும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் கண்டிப்பாக அவசியம் தேவை.
பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தமிழகம் வரும் விமான பயணியர் அனைவருக்கும் இ – பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு வரும் இதர மாநில பயணியர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.
சர்வதேச பயணியரை பொறுத்தவரை, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். இதே போல, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu