அதிமுக, பா.ம.க கூட்டணியில் சிக்கலா, முன்னாள் அமைச்சர் பரபரப்பு பதில்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
அண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து கழக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை வேளச்சேரியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தொழிற்சங்கத்தின் தெற்கு மண்டல செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் 17 பணிமனைகளின் கிளை நிர்வாகிகள் பொறுப்புகளுக்கும் 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை செலுத்தி வேட்பு மனுவை உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர்.
வரும் 22 ம் தேதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கலை பார்வையிட்ட பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர்.
எப்போதும் சமுதாய தலைவர்களை மதிக்கும் இயக்கம் அதிமுகதான். சுதந்திரத்திற்காக பல இன்னல்களை அனுபவித்த மாவீரன் அழகு முத்துக்கோன். அவருக்கு அதிமுக சார்பில் எழும்பூரில் கம்பீர சிலை வடிவமைக்கப்பட்டது,
அப்போது கண்ணப்பனும் அமைச்சராக இருந்தார். அழகு முத்துக் கோன் வீரத்தை திமுக அரசு மறைக்க முயல்கிறது, நேற்று வெளியிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில் அழகு முத்துக்கோன் பெயர் இடம்பெறாதது யாதவர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது. திமுக அமைச்சரவையில் உள்ள யாதவர் சமூகத்தை சேர்ந்த ராஜ கண்ணப்பன் , பெரியகருப்பன் கோபத்தில் ராஜினாமா செய்வார்களா..?
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் நிதிநிலை சீரமைந்த பிறகு தரப்படும் என்று முதலமைச்சர் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் கருத்து. மத்திய அரசு ஏற்றிக் கொடுத்த அகவிலைப்படியை மாநில அரசு ஏற்றித் தரவில்லை. அதிமுகவினர் உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று பேச மாட்டோம். திமுகவினர் இல்லத்தரசி , அரசு ஊழியர்களுக்கு நாமம்தான் போடுவார்கள்.
மலைக் கள்ளன் படத்தில் எம்ஜிஆர் பாடிய ' எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் திமுகவிற்கு பொருந்தும்.
ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நிதியை அதிகரிப்பது இயல்பானதுதான். வேளாண் தனி நிதி அறிக்கை வரவேற்க கூடியதுதான், ஆனால் கூட்டுப்பண்ணை போன்றவற்றை ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம்.
அதிமுக - பாமக தோழமை தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணியை ராமதாஸ் தற்போது வரை ஏற்று கொண்டுள்ளார்.
தேர்தலில் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு , அடுத்தவர் மீது பழிபோட்டு விட்டு The great escape என்று செல்லும் விதமாக திமுக தற்போது நடந்து கொண்டுள்ளது. அர்ச்சகர் ஆவோர் அகம விதிகளை முறையாக கற்க வேண்டும் என்பதே அதிமுக நிலைப்பாடு.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்தது தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்தோம், தப்போது விளக்கம் கேட்டு நோட்டிஷ் அனுப்பியுள்ளோம்.
சார்பட்டா பரம்பரையில் குறிப்பிட்ட சில காட்சிகளில் உண்மைக்கு மாறனா விசயங்கள் உள்நோக்கோடு இருக்கிறது. எம் ஜி ஆர் Sports man தண்டால் , சிலம்பம் , கோல் சண்டை செய்வார்.திரைப்படத்திலும் அரசியலிலும் ஒரிஜினல் ஹீரோ எம்.ஜி். ஆர் தான். முகமது அலியை அழைத்து வந்து விழா நடத்தி குத்துச்சண்டையை ஊக்குவித்தவர் எம்ஜிஆர். சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு உடலை திடமாக வைத்து கொள்வது தொடர்பாக அவர் அறிவுரை கூறியுள்ளார்.
வளரும் இளைஞர்கள் மத்தியில்
திமுக தான் விளையாட்டை ஊக்குவிப்பதாக காட்டியுள்ளனர். இந்த படத்தை எடுப்பதற்காக திமுகவிடம் பணம் வாங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்த படம் மூலம் அரசியலை புகுத்தி ஆதாயம் தேட சதி செய்துள்ளனர்.
முதல் கையெழுத்து மூலம் பூரண மது விலக்கை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். சாராயத்தை கொண்டு வந்து குடிக்க கற்றுக் கொடுத்தது திமுக தான்.
படத்தில் திமுகவினரை உத்தமர்கள் போல காட்டியுள்ளனர். 1970 ல் மதுக்கடையை திறக்க வேண்டாம் என ராஜாஜி , கருணாநிதியின் கையை பிடித்து கொஞ்சினார்
சார்பட்டா பரம்பரை திமுகவின் பிரசார படம் . ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம். மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த உண்மை கதை எல்லோருக்கும் தெரியும்.
எம்ஜிஆரை அவமதிக்கும் விசயத்தை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது.
வளர்ந்து வரும் இயக்குநர்களை மதிக்கிறோம். ஊக்கப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் கண்டனம் தெரிவித்த பிறகும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கவில்லை " என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu