அதிமுக உட்கட்சி தேர்தல்: அடுத்த மாதம் அறிவிப்பு

அதிமுக உட்கட்சி தேர்தல்: அடுத்த மாதம் அறிவிப்பு
X

பைல் படம்

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கெடு விதித்துள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.ஜெயலலிதா மறைந்த பிறகு மீண்டும் 2020 முறைபடி தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா காலமாக இருப்பதால் தேர்தல் நடத்தப்படவில்லை. அதிமுக சார்பில் தேர்தல் கமி‌ஷனில் காலஅவகாசம் கேட்டு இருந்தனர்.

இப்போது கொரோனா கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கெடு விதித்துள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முறையான அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா தொடர்ந்த வழக்கும் அதேபோல் அதிமுக சார்பில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டதால் அவர் உட்கட்சி விவகாரத்தில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்ற வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில் தேர்தல் கமி‌ஷன் உட்கட்சி தேர்தலை நடத்த கெடு விதித்துள்ளதால் அடுத்த மாதம் அதிமுக கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியாக யார் நியமிக்கப்படுவார் என்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!