சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த 4 பயணிகள் கைது

சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த  4 பயணிகள் கைது
X

சென்னை விமானநிலையம் (பைல் படம்)

சென்னைக்கு விமானம் மூலம் 93 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பயணிகள் 4 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சாா்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த ஏா்இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு உள்நாட்டு பயணியாக வந்த ஒரு 28 வயது ஆண் பயணியை நிறுத்தி சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது அந்த பயணி நான் திருவனந்தபுரத்தில் தான் இந்த விமானத்தில் ஏறி வருகிறேன்.எனவே நான் உள்நாட்டு விமான பயணி என்னை நீங்கள் சோதனையிட அதிகாரம் இல்லை என்று சுங்கச்சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.

ஆனால் சுங்கத்துறையினா்,நீங்கள் வந்தது சா்வதேச விமானம்.அதனால் உள்நாட்டு பயணியாக இருந்தாலும் சந்தேகப்பட்டால் சோதனையிடுவாம் என்று கூறினா். அதோடு அந்த பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை கலைந்து சோதனையிட்டனா்.அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.43.3 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கப்பசை அடங்கிய பாா்சலை கைப்பற்றினா்.

அதோடு பயணியையும் கைது செய்தனா்.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில்,சாா்ஜாவிலிருந்து தங்கப்பசையை கடத்தி வந்த பயணி,தங்கப்பசை பாா்சலை விமான சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு,திருவனந்தபுரத்தில் இறங்கி சென்றுவிட்டாா்.

அதே கடத்தல் கும்பலை சோ்ந்தவரான, இந்த பயணி விமானத்தில் உள்நாட்டு பயணியாக ஏறி,தங்கப்பசையை எடுத்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு,விமானத்திலிருந்து இறங்கி வந்தது தெரியவந்தது.இதையடுத்து சாா்ஜாவிலிருந்து தங்கத்தை கடத்தி வந்து திருவனந்தபுரத்தில் இறங்கி சென்ற முக்கிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனா்.

இதற்கிடையே துபாயிலிருந்து ஃபிளை துபாய்,இலங்கையி ஏா்இந்தியா,சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தன.அந்த விமானங்களில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது 3 விமானங்களிலும் வந்த சென்னையை சோ்ந்த 3 பயணிகள் தங்களுடைய உள்ளாடைகள்,சூட்கேஸ்க்குள் மறைத்து வைத்திருந்த 1.23 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.50 லட்சம்.இதையடுத்து கடத்தல் பயணிகள் 3 பேரையும் கைது செய்தனா்.

சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் துபாய்,சாா்ஜா,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த 4 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.93.3 லட்சம் மதிப்புடைய 2.23 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,4 பயணிகளை சுங்கத்துறையினா் கைது செய்துள்ளனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!