/* */

புனேவில் இருந்து 3.65 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது!

புனேவில் இருந்து விமானம் மூலம் 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து சென்னைக்கு வந்தடைந்தது.

HIGHLIGHTS

புனேவில் இருந்து 3.65 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது!
X

புனேவில் இருந்து சென்னை வந்த கோவிசீல்டு மருந்துகளை இறக்கும் பணியில் ஊழியர்கள். 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 31 பார்சல்களில் 977 கிலோ எடையில் சுமார் 3.65 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்ததன. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

Updated On: 11 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்