இலங்கை சிறையில் விடுதலையான மீனவர்கள் 29 பேர் தமிழகம் வந்தனர்

இலங்கை சிறையில் விடுதலையான மீனவர்கள் 29 பேர் தமிழகம் வந்தனர்
X
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் 29 பேர் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 29 மீனவர்கள் இன்று இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி வந்தனர். விமானம் மூலம் சென்னை வந்த அவர்களுக்கு பாரதிய ஜனதா மீனவரணி மாநில தலைவர் சதீஸ்குமார், மாநில செயலாளர்கள் டாக்டர்.துரை.சண்முகமணி, சௌந்தர் மற்றும் நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

அப்போது மீனவர் அணி மாநில தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், இலங்கை ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று 29 பேர் விடுதலையாகி வந்துள்ளார்கள். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் முயற்சியால் மீனவர்கள் வந்தடைந்துள்ளார்கள். படகுகளை மீட்டு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்ததை மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்துவோம். மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினால் சிறை பிடிப்பதை தடுக்க நிரந்தர தீர்வு மத்திய அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!