சென்னை விமான நிலையத்தில் 2.6 கிலோ தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 2.6 கிலோ தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது
X
சென்னை விமான நிலையத்தில், அபுதாபில் இருந்து வந்த பயணியிடம், ரூ.1.12 கோடி மதிப்புள்ள, 2.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அபுதாபியில் இருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு, எத்தியாட் ஏா்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த 24 வயது ஆண் பயணி ஒருவா் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சோதனை செய்ததில், அந்த பயணி சுங்கத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டாா். எனினும், சுங்கத்துறையினா் தொடா்ந்து சோதனை மேற்கொண்டனா்.

இதில், அவர் கொண்டு வந்த காபி மேக்கா் மிஷினில், உளுளை வடிவில் தங்கப்பசை உருண்டை இருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதன் எடை 2.6 கிலோ.அதன் மதிப்பு ரூ.1.12 கோடி. இதையடுத்து, சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து, ராமநாதபுரம் பயணியை கைது செய்தனா். 2.6 கிலோ தங்கப்பசையையும் பறிமுதல் செய்தனா். மேலும் கைது செய்யப்பட்ட பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ளவா் கடத்தல் குருவி என்றும், இவரை கடத்தலில் ஈடுபடுத்தியவா்கள் சென்னையை சோ்ந்த பிரபல கடத்தல் ஆசாமிகள் இருவா் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறையினா்,கைது செய்யப்பட்ட பயணியை வைத்து, கடத்தல் ஆசாமிகள் இருவரிடமும் பேசவைத்து, சென்னை விமானநிலையத்திற்கு வரவழைத்தனா். அதன்படி விமானநிலையம் வந்த 2 கடத்தல் ஆசாமிகள் இருவரையும் கைது செய்தனா். மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!