கொரோனாவால் பாதித்த தொழில்களை மீட்டெடுக்க ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் அன்பரசன்

கொரோனாவால் பாதித்த தொழில்களை மீட்டெடுக்க ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் அன்பரசன்
X

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசினார்.

கொரோனாவால் பாதித்த சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல் மற்றும் இணைய வழி பயிற்சி திட்ட தொடக்க விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர்களுக்கு மற்றும் கிளை மேலாளர்களுக்கு 15 மாவட்டங்களில் 15 ஜீப்புகள் ரூ.1.25 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களுக்கு காணோளிக்காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெரிவித்ததுபோல் கொரோனா காலத்தில் சிறு,குறு நடுத்தர தொழில்களை மீட்டேடுக்க மூன்று வருடத்தில் மூன்று தவணையாக வழங்க இருந்த முதலீட்டு மானியங்கள் ஒரே தவணையாக வழங்க ரூ.280 கோடி நிதி ஒதுக்கி அதனை ஓரே தவணையாக வழங்கி வருவதாக குறிப்பிட்டார். மேலும் சிட்கோ சிமெண்ட் விலை குறைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் தொழில் முனைவோரை அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறோம் என்றார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil