கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு
X
விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு, விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. காய்கறி வரத்து குறைவால், அவற்றின் விலை அதிகரித்திருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே காய்கறி விலை உயர்ந்தே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும், அவரை ரூ.60-க்கும், இஞ்சி ரூ.70-க்கும் விற்பனை ஆகிறது. வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்