சென்னையில் 1,600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

சென்னையில் 1,600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
X
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,600 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடக்க உள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் தலா 8 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 8 முகாம்கள் 3 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு அணி 400 தடுப்பூசிகளுடன் காலை முதல் மதியம் வரை ஒரு இடத்திலும், மதியம் முதல் மாலை வரை ஒரு இடத்திலும் செயல்பட உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp இணைதளத்தில் பொதுமக்கள் காணலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!