வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அக்டோபர் 2 சனிக்கிழமை இன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தேசிய தலைநகரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.89 லிருந்து 25 பைசா உயர்ந்து 102.14 ரூபாயாகவும் டீசல் விலை 90.17 ரூபாயிலிருந்து 90.47 ரூபாயாக உயர்த்தப்பட்டது என இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 108.19 ரூபாயாகாவும், டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 98.16 ரூபாயாகவும் உள்ளது.
நான்கு மெட்ரோ நகரங்களை பொறுத்தவரை, மும்பையிலேயே எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்று அரசு நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட வரி காரணமாக மாநிலங்கள் முழுவதும் எரிபொருள் விகிதங்கள் மாறுபடும். சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 99.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் 95.02 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தினசரி எரிபொருள் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu