விபத்தில் சிக்கியவருக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்:பொதுமக்கள் பாராட்டு!

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்:பொதுமக்கள் பாராட்டு!
X

விபத்தில் சிக்கியவருக்கு உதயநிதி ஸ்டாலின் உதவிய காட்சி.

சென்னை காமராஜர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை அவ்வழியாக வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவி செய்தார்.

சென்னை காமராஜர் சாலையில் அமரர் ஊர்தியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகன ஒட்டி ஒருவர், சாலை விபத்தில் சிக்கினார். அப்போது அவ்வழியாக சென்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கியவருக்கு உதவியுள்ளார்.

விபத்தில் சிக்கிய திருவெற்றியூரை சேர்ந்த பிரேம்நாத் என்பவரை உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கிய நபருக்கு உதவிய உதயநிதி ஸ்டாலினுக்கு அங்குள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!