குற்றச்சாட்டை மறுத்த உதயநிதி: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்

குற்றச்சாட்டை மறுத்த உதயநிதி: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்
X

சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சரச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 7-க்குள் (இன்று) விளக்கமளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயநிதி, முழு உரை மற்றும் புகாரின் நகல் கிடைத்தவுடன் விரிவாக விளக்கமளிக்க அவகாசம் கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
future of ai in retail