மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை..!

மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை..!
X

தமிழக முதல்வரான மு.க ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தாயார் தயாளுஅம்மாளிடம் ஆசிபெற்றார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் முக ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துரைமுருகன், கே.என் நேரு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். முதல்வர் செல்லும் வழியெல்லாம் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்