தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி
X
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் முன்பு வகித்த பதவிகளும்:

1. சென்னை ஆயுதப் படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி ஐபிஎஸ் - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங் - சென்னை ஆயுதப் படை ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜி/உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன் - திருச்சி மாநகரக் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் - சென்னை காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி சரவண சுந்தர் - திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. திருச்சி சரக டிஐஜியாக இருந்த ராதிகா - சென்னை டிஐஜியாக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிஷா - சென்னை காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த மாடசாமி - சேலம் வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

10. சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த வேதரத்தினம் - சென்னை டிஜிபி அலுவலகத்தில் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!