சென்னையில் மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் போக்குவரத்துக்கள் இட மாற்றம்
மெட்ரோ ரெயில் பணி நடப்பதால் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளனர்.
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் ஆர்டிஓ அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான பணி தொடங்குகிறது. இதனால் அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆண்டர்சன் சாலையில் ஆர்.டி.ஓ அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.
ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.
மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து பில்கிங்டன சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu