டிராஃபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடம்..?

டிராஃபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடம்..?
X

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த டிராஃபிக் ராமசாமிக்கு (வயது 87) கடந்த 4ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்காக சோழிங்கநல்லூரில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது வீடு, அலுவலகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமானதால் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!