தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது : அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது : அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி
X
அமைச்சர் பொன்முடி ( பைல்)
தமிழகத்தில் கல்லூரி திறப்பது எப்போது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பரபரப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

கல்வியியல் ஆசிரியர் கல்வி(பி.எட்) பயில ஆண்டு கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகம் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே துவங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்,உதவியாளர், டிரைவர் மற்றும் வாட்ச்மேன் என நான்கு பேர் மட்டுமே இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதியே அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய இயலாத மாணவர்கள் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் சகோதரி முறைகேடாக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா நெருக்கடி முடிந்த பிறகு முதல்வருடன் கலந்து பேசி கல்லூரி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!