அன்னை தெரசா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் -விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

அன்னை தெரசா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் -விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
X

சென்னை : ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினரான அன்னை தெரசா சாரிட்டபில் டிரஸ்ட் அதன் துணை அமைப்புகளான அன்னை தெரசா பேரவை மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதித்த ஆட்டோ ஓட்டுனர் நல சங்கங்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுத் திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் எழை எளியோருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சூலை மேட்டில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், டிரஸ்டிகள் சேவியர், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் டிரஸ்ட் மற்றும் அன்னை தெரசா ஆட்டோ ஓட்டுநர் சங்க முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!