அண்ணாசாலையில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சி: 3 பேர் மீது வழக்கு

அண்ணாசாலையில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சி:  3 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

சென்னை அண்ணாசாலையில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்திய 3 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி இறுதி ஊர்வலம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கென சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மீறுவோர் மீது, பாரபட்சமின்றி சென்னை மாநகராட்சி, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்ணாசாலையில் உள்ள 'பால்ஸ் ரெஸ்டாரன்ட்'டில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அதில், அளவுக்கு அதிகமான கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இதில் பங்கேற்றோர், சமூக இடைவெளி, முககவசம் அணியாமலும் இருந்துள்ளனர். இது தொடர்பான எழுந்த புகார் காரணமாக திருவல்லிக்கேணி போலீசார், அனுமதியின்றி நடன நிகழ்ச்சியை நடத்திய முத்துராஜ் (62) ரஜினி (32) ராஜி( 34) ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி