2 நாட்களில் கீழ்ப்பாக்கத்தில் துணை மருத்துவமனைகள் - அமைச்சர் சேகர்பாபு

2 நாட்களில் கீழ்ப்பாக்கத்தில் துணை மருத்துவமனைகள் - அமைச்சர் சேகர்பாபு
X

அமைச்சர் சேகர்பாபு

இரு தினங்களில் சென்னை கீழ்பாக்கத்தில் துணை மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிக மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகறிது.

இந்தநிலையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் 2 நாளில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் துணை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!