தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை கண்டறியும் மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோன நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலை குறித்த அறிவிப்பு பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் ஸ்கிரீனிங் மையம் மற்றும் புறநோயாளிகள் பிரிவினை திறந்து வைத்தர்.
இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், கருப்பு பூஞ்சை கண்டறிதல் மற்றும் புற நோயாளிகள் பிரிவு புது முயற்சியாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கருப்பு பூஞ்சை தொடர்பாக அனைத்து வகை பரிசோதனைகள் மேற்கொள்ள அதற்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் வசதிகள் ஒரே இடத்தில் வழங்க இந்த மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையில் கருப்பு பூஞ்சை நோயினை கண்டறிவது அவசிய என்பதால் சிறப்பு ஏற்பாடாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தம் தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் உயிர் இழந்துள்ளனர். மாசுபட்ட தண்ணீரை ஆக்சிஜன் உடன் பயன்பாடுத்துவது காரணமாக கூட கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை வல்லுநர் குழு ஆராய்ந்து வருகிறது.
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மத்திய தொகுப்பில் இருந்து வருகிறது. தேவைகள் அதிகம் உள்ள சூழ்நிலையில் குறைவான எண்ணிக்கையில் மருந்துகள் ஒதுக்கப்படுவதால் தினமும் தேவையான எண்ணிக்கையில் மருந்துகள் ஒதுக்க கேட்கப்பட்டு வருகிறது.
இன்று 4.20 லட்சம் டோஸ் தடுப்பூசி வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்பு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பபடும். 42 லட்சம் தடுப்பூசி ஜூன் மாதம் மத்திய தொகுப்பில் இருந்து வருகிறது.
கொரோனா சிகிச்சைக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் சுகாதார துறையின் அமலாக்கதுறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu