குஷ்புவை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானி பிரச்சாரம்!

குஷ்புவை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானி பிரச்சாரம்!
X
ஆயிரம்விளக்கு தொகுதி: குஷ்பு சுந்தரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பிரச்சாரம்!

ஆயிரம்விளக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி வாக்கு சேகரித்தார்.


ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதி புஷ்பா நகரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக ஏனைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி மத்தியில் ஆளுகின்ற ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக வாக்காளர்கள் மத்தியில் பேசி வேட்பாளர் குஷ்பு சுந்தருக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!