சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்
X
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது துபாயில் இருந்து வந்த விமான பயணிகள் 5 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ. 64.84 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம் பறிமுதல் இருந்தது.இது தொடர்பாக 5 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல வந்த பயணி ஒருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவரின் உடமையில் ரூ. 46.29 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கடத்தி செல்வது தெரியவந்தது.இதையடுத்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!