சென்னைக்கு வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

சென்னைக்கு வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!
X
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி சென்னைக்கு வந்து சேர்ந்தது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க அவசர கால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

3வதாக ரஷ்யாவிவன் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மருந்து செலுத்தும் பணி ஜூன் மாத மத்தியில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரஷ்யாவில் தயாரான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி ஐதராபாத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தது.

இந்த தடுப்பூசிகள் வாகனம் மூலம் பெரிய பனிச்சேரியில் உள்ள தனியார் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags

Next Story