பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு
X

பள்ளி மாணவிகள் (பைல் படம்)

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசுத் தேர்வுத் துறை, வெளிமாநிலங்கள், வேறு பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்புப் படித்து தற்போது பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவா்களின் மதிப்பெண்களைப் பள்ளிகளிலிருந்து பெற்றது.

தொடா்ந்து, மாணவா்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான முறைகளை அரசாணையாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால், அரசின் அனுமதி கிடைத்தவுடன், தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை அரசு தேர்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future