சென்னை அண்ணா சாலையில் போலீசார் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

சென்னை அண்ணா சாலையில் போலீசார் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
X

பைல் படம்.

சென்னை அண்ணா சாலையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுகளை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஒரு சிலர் தேவையில்லாத அச்சத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னலில் அண்ணா சாலை போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக வாகன ஓட்டிகளிடையே தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்