தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: ராதாகிருஷ்ணன்
X

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியாவது :

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்புள்ளவர்கள் 6 பேர் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 11 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள், 8 ஆயிரம் ஐசியூ படுக்கைகள் தயாராக உள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

கங்கோவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு புதிதாக ஒருவருக்கு S- ஜூன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு மொத்தம் 9 பேருக்கு S- ஜூன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேருக்கு S- ஜீன் குறைவாக உள்ளது. முதற்கட்ட சோதனை முடிவுகளையடுத்து மறு பரிசோதனைக்கு அவர்களது சோதனை முடிவுகளை பெங்களூர் அனுப்பியுள்ளோம்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!