அண்ணாசாலையில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

அண்ணாசாலையில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்
X

அண்ணாசாலையில் நடந்த விபத்தில், பைக் ஓட்டி வந்தவர் நூலிழையில் தப்பினார்

வளைவில் லாரி திரும்பும் போது விபத்தை தடுக்க சட்டென்று பிரேக் போட்டதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் நூலிழையில் உயிர் தப்பினர்

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதி அருகே இன்று நள்ளிரவு குரோம்பேட்டையில் இருந்து இராயப்பேட்டை நோக்கி லாரி வந்தது. அப்போது சாலையின் வளைவுவில் லாரி ஓட்டுனர் லாரியை திரும்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் கவன குறைவு காரணமாக லாரியை முந்த முயன்றார்

இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் வந்தவர் கீழே விழுந்தார். உடனே லாரி ஓட்டுநர் பிரேக் போட்டதால் லாரியின் பின்சக்கரத்தில் பைக் சிக்கியது. நூலிழையில் சிறு காயங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் லாரியை ஒட்டி வந்தவர் குரோம்பேட்டையை சேர்ந்த அந்தோனி ராஜ் என்பதும்.இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கொருக்குபேட்டையை சேர்ந்த சங்கர் என்பதும் தெரியவந்தது

Tags

Next Story
ai in future agriculture