தமிழ்நாட்டில் மழை எங்கே, எப்போது பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை

தமிழ்நாட்டில் மழை எங்கே, எப்போது பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை
X

தமிழக வானிலை நிலவரம் பைல் படம்

தமிழ்நாட்டில் மழை எங்கே, எப்போது பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்

18.07.2021: நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

19.07.2021: கோயமுத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

20.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

21.07.2021, 22.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

செய்யார் (திருவண்ணாமலை), சூலகிரி (கிருஷ்ணகிரி) தலா 10, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 9, வந்தவாசி (திருவண்ணாமலை), சென்னை நுங்கம்பாக்கம் தலா 8, ஆரணி (திருவண்ணாமலை), நடுவட்டம் (நீல்கிரிஸ்), சின்னக்கல்லார் (கோவை) தலா 7, திருப்பத்தூர் PTO, நாகப்பட்டினம் தலா 6, மதுராந்தகம் (செங்கல்பட்டு), போலூர் (திருவண்ணாமலை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), புழல் ARG (திருவள்ளூர்) தலா 5, காரைக்கால், அண்ணா யூனிவர்சிட்டி (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), கிருஷ்ணகிரி , பாலக்கோடு (தர்மபுரி), திருத்தணி (திருவள்ளூர்) தலா 4, திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி தலா 3.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்:

18.07.2021 முதல் 22.07.2021 வரை: தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.07.2021 முதல் 22.07.2021 வரை: தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

20.07.2021 முதல் 22.07.2021 வரை: மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

18.07.2021 முதல் 22.07.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

18.07.2021 முதல் 22.07.2021 வரை: வடக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil