சென்னை விமான நிலையத்தில் கட்டு, கட்டாக வெளிநாட்டு கரன்சி, கடத்த முயன்ற வாலிபர் கைது
சென்னை விமானநிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணியிடம் பிடிப்பட்ட வெளிநாட்டு கரன்சி.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும்,அவா்கள் உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதணையிட்டு அனுப்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது சென்னையை சோ்ந்த 35 வயது ஆண் பயணி சிறப்பு விசாவில் இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்தாா்.அவா் ஒரு அட்டைப்பெட்டி வைத்திருந்தாா்.அதில் என்ன இருக்கிறது? என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டனா்.அதனுள் வடாம்,அப்ளம் போன்ற உணவு பொருட்கள் இருப்பதாக பயணி கூறினாா்.ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த அட்டைப்பெட்டியை திறந்து பாா்த்து பரிசோதித்தனா்.அட்டைப்பெட்டியின் அடியில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணங்களான சவுதி ரியால்,யூரோ கரண்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த மதிப்பு ரூ.11.48 லட்சம். இதையடுத்து பயணியின் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனா்.
அதன்பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் பயணியையும்,கைப்பற்றப்பட்ட பணத்தையும் மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்.அவா்கள் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu