இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கேட்கும் சட்ட முன் முடிவை, தமிழக ஆளுநர் உடனே குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிடக் கோரி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மாணவர்களுக்கு பழரசம் கொடுத்து முடித்து வைத்தனர்.
*பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்*:
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு என்ற ஒரு தேர்வை ஒன்றிய அரசு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதால் அனிதா உட்பட தமிழகத்தில் 25 மாணவர்கள் தற்கொலை செய்யப்பட்டார்கள். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் உடைய பரிந்துரையை பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் இதுவரையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அனைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இதற்குப் பிறகும் தமிழக ஆளுநர் அவர்கள் காலதாமதம் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு தீர்மானத்தை அனுப்பி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற இந்த போராட்டத்தில் தமிழக மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆளுநர் உரிய முடிவை காலத்தோடு எடுக்க வேண்டும். இல்லையென்றால் கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போல் நீட் திணிப்பிற்கு எதிராக கொந்தளித்து தமிழகம் முழுவதும் போராடக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் சபாநாயகர் மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கது எனவும்.
அதேபோல் 7 பேர் விடுதலையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் உச்சநீதிமன்றம் அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுக்கலாம் என்ற கருத்தை கூறியும். இதுவரை மத்திய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu